வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே - மு.க.ஸ்டாலின்


வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே - மு.க.ஸ்டாலின்
x

வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மாற்றுத்திறனாளிகளின் 4-வது மாநில மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

தேர்தலில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை சந்திப்பவன் அல்ல நான், என்றைக்கும் உங்களோடு இருப்பவன். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கண்ணும், கருத்துமாக கலைஞர் பார்த்துக்கொண்டார். எங்களிடமும் மாற்றுத்திறனாளிகளை அப்படியே பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். உங்களது குறைகளை தீர்க்க கருவியை பயன்படுத்துவது போல, உங்களுக்கு உறுதுணையான கருவியாக நான் இருப்பேன்.

மேலும், சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே. 10 ஆண்டுகால் அதிமுக ஆட்சியில் இருந்த அவலங்கள் உங்களுக்கு தெரியும்.

கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்று திமுக அரசு நல்லாட்சியை வழங்கி வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை செயல்படுத்தவே ஆட்சிக்கு வந்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சி அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக செயல்படுகிறது.

நிதி ஆதாரம், சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவேன் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story