சாத்வி பிரக்யா தாகூரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை: மெகபூபா முப்தி


சாத்வி பிரக்யா தாகூரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை: மெகபூபா முப்தி
x

சாத்வி பிரக்யா தகூரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெகபூபா முப்தி, பிரக்யா தாகூரின் பேச்சு தனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றார்.

ஸ்ரீநகர்,

கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகாவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே தெற்கு மண்டல வருடாந்திர கூட்டத்தில் சத்வி பிரக்யா தாகூர், உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. எல்லோருக்கும் தற்காப்புக்கான உரிமை இருக்கிறது. ஆகையால், நம் வீட்டினுள் யாரேனும் அத்துமீறி ஊடுருவி தாக்கினால் அவர்களுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

சாத்வி பிரக்யா தகூரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெகபூபா முப்தி, பிரக்யா தாகூரின் பேச்சு தனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றார். இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி கூறியதாவது: பாஜக எம்பி வெளிப்படையாக முஸ்லிம்களை இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது மற்றும் அவரது ஆதரவாளர்களை கத்தியைக் கூர்மைப்படுத்துமாறு அறிவுறுத்தியது அதிர்ச்சி அளிக்கவில்லை" என்றார்.


Next Story