மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்


மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
x

அம்பை பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அம்பாசமுத்திரம் நகர தி.மு.க. சார்பில் அம்பை முகைதீன் பாத்திமா நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கி, நோட்டு புத்தகங்களை வழங்கினார். அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

பள்ளி தாளாளர் ஆறுமுகம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, நகராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

1 More update

Next Story