வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்


வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்
x

வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் நகரில் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகள், குடிநீர் வழங்கப்படுகிறதா?, சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி ஆகியோர் சத்துவாச்சாரி, மக்கான் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடை, பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தரமற்ற முறையில் உணவுகள் தயாரித்த மற்றும் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மேலும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த 3 கிலோ சிக்கன் இறைச்சி மற்றும் கலப்பட டீத்தூள் 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய பெட்டிக்கடை, ஓட்டலுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது. அதனை பயோடீசலுக்கு வழங்க வேண்டும். குளிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு குடிக்க சூடான தண்ணீர் வழங்க வேண்டும். ஓட்டலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story