நகராட்சி ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


நகராட்சி ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) அனுப்பினார்.

திருப்பத்தூர்

ஆக்கிரமிப்பு

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு, ஜின்னா ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் அதிகளவு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் கலெக் டர் அமர்குஷ்வாஹா பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது சாலையோரம் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்தது.

நோட்டீஸ்

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகராட்சி ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் ஆகியோருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா 'மெமோ' வழங்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் இரவு வரை பஸ் நிலையம், ஜின்னாரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடை பாதைகளில் வைக்கப்பட் டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். மேலும் தள்ளுவண்டி கடைகளை பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறாக மீண்டும் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story