மதுவிலக்கு சம்பந்தமான தகவல் தெரிவிக்க செல்போன் எண் அறிவிப்பு
மதுவிலக்கு சம்பந்தமான தகவல் தெரிவிக்க செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 14 மற்றும் 15-ந் தேதிகளில் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 2 நாட்களில் 116 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து போலீசார் நேற்றும் சாராய வியாபாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை, சாராயம் விற்பனை போன்ற மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வகையில் 8939473233 என்ற செல்போன் எண் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செல்போன் எண்ணின் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.