கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் விண்ணப்ப விநியோக குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.
Related Tags :
Next Story