மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தென்பாதி, சபரி நகர், வி.என்.எஸ்.நகர், அரசு ஆஸ்பத்திரி சாலை, டி.பி.ரோடு, புதிய பஸ் நிலையம், தேர் கீழவீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, பிடாரி கீழ வீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, பழைய பஸ் நிலையம், கடைவீதி, கீழத்தென்பாதி, கற்பகம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சீர்காழி உதவி செயற்பொறியாளர் விசுவநாதன் தெரிவித்தார்.

இதேபோல் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் எடமணல், வழுதலைக்குடி, ராதா நல்லூர், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் திருவெண்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருநகரி மின் வழி பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், திருநகரி, நெப்பத்தூர், முள்ளி பள்ளம், கீழ சட்டநாதபுரம், மங்கை மடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்தார்.

மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ரூரல் உயர் அழுத்த மின்பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த உயர்அழுத்த மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் இளந்தோப்பு, பட்டவர்த்தி, தலைஞாயிறு, மண்ணிப்பள்ளம், திருக்குரக்காவல், திருவாளப்புத்தூர், அழகன்தோப்பு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.


Next Story