பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 13 July 2022 11:45 AM GMT (Updated: 13 July 2022 12:05 PM GMT)

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது.

சென்னை:

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2017-18-ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,060 இடங்களுக்கு நேரடி நியமனம், பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த பணி தேர்வில் நேர்காணல் எதுவும் கிடையாது.

தேர்வர்கள் போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது.

இதன் மூலம் நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என தேர்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் வேறுவிதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story