நொய்யல் நதி மேம்பாடு ஆலோசனைக்கூட்டம்
நொய்யல் நதி மேம்பாடு ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர்
திருப்பூரில் அணைப்பாளையம் முதல் மணியகாரம்பாளையம் வரைக்கும் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு நொய்யல் ஆற்றை மேம்படுத்துவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பனியன் தொழிற்துறையினர், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாநகராட்சி பங்களிப்புடன் ஆற்றின் இருகரைகளும் அழகுபடுத்தப்பட உள்ளன. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆற்றங்கரைகளில் இட வசதி உள்ள இடங்களில் சிறு பூங்கா அமைத்தல், சிறுவர் விளையாட்டு திடல், கல் இருக்கைகள், அலங்கார கூரைகள், மரம், செடிகள் நடுதல், அலங்கார மின் விளக்கு, அலங்கார கற்கள் பதித்தல் மற்றும் ரோடுகள் பிரியும் இடத்தில் ரவுண்டானாக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல் அதற்கான செலவினம் போன்ற விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.