குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்


குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்
x

அன்னவாசலில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசலில் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மூடப்பட்டிருக்கும் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தோளில் சுத்தியலை சுமந்து அன்னவாசல் வருவாய்த்துறை அலுவலகம் எதிரே நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சின்னையா, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் பகுதி மக்களுக்கு ஜீவாதாரமாக நடைபெறக்கூடிய கல் உடைக்கும் தொழில் கடந்த 9 மாத காலமாக அனுமதிக்கப்படாததால் குவாரிகள் முடங்கி கிடக்கிறது. இந்த தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை கல்குவாரிகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Next Story