திருமங்கலம் அருகே கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி; 2 பேர் கைது


திருமங்கலம் அருகே கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி; 2 பேர் கைது
x

திருமங்கலம் அருகே ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.10 லட்சம் கடன்

திருமங்கலம் கப்பலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கனகரத்தினம் (வயது54). இவர் வீட்டின் மாடியில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் தயாராக உள்ளது. பணம் பெற வேண்டுமானால் ரூ.60,000 கமிஷன் தர வேண்டும என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அரசபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் (69) இவர்கள் இரண்டு பேரிடம் கமிஷன் தொகை ரூ.30,000 கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலியான ரூபாய் 5 லட்சத்திற்கு கருப்பு பேப்பர்களை கொடுத்து சென்று விட்டனர்.

போலீசில் ஒப்படைத்தார்

அந்த பேப்பர்களை வீட்டில் சென்று பார்த்தபோது, அவை அனைத்தும் கருப்பு பேப்பராக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கனகரத்தினம், கருப்பு பேப்பராக உள்ளது என கேட்டுள்ளார். அதனை சரி செய்ய அதற்கு ஒரு ரசாயனம் தருவதாகவும் அதை பேப்பரில் தடவினால் உண்மையான பணமாக மாறிவிடும் என்று கூறிஉள்ளார். மேலும் ராஜேந்திரன் மற்றும் வீரபத்திரனிடம் மீதி பணம் 30 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த கனகரத்தினம் உறவினர் உதவியுடன், ராஜேந்திரன் மற்றும் வீரபத்திரன் இருவரையும் பிடித்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story