தமிழகத்தில் உள்ள 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


தமிழகத்தில் உள்ள 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

தமிழகத்தில் உள்ள 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

சென்னை,

வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காளதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே, இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், நாகலாந்து, ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உத்தரகாண்ட், சத்தீஷ்கார், பீகார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டல எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story