எண்ணும் எழுத்தும் பயிற்சி
மஞ்சக்குடி தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது
திருவாரூர்
குடவாசல்,
குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட எண்னும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடம் தொடர்பாக ஆசிரியர்கள் 209 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன், ஜெயலட்சுமி, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன உதவி இயக்குனர் காமராஜ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பை நடத்தினர். முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூபாலன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story