ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

கொரடாச்சேரியில ்ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்று நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் நாள் பயிற்சி நேற்று கொரடாச்சேரியில் நடைபெற்றது. இப்ப பயிற்சியை ஆசிரியர் வாரிய இணை இயக்குனர் பி.பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சுபாஷினி, மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சிவசுப்பிரமணியன், விரிவுரையாளர் கலைச்செல்வி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி, உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிருந்தா தேவி, ஆசிரிய பயிற்றுனர்கள் சரவணன், ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர். இப்பயிற்சியில் கொரடாச்சேரி ஒன்றியத்தைச் சேர்ந்த 99ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 3-வது நாள் பயிற்சி இன்று நடைபெறும். இதேபோல் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடியில் ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன் பயிற்சியை தொடங்கி வைத்தார். புள்ளியியல் உதவி இயக்குனர் காமராஜ் கலந்து கொண்டு 1 முதல் 3- ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சியில் ஆசிரியர் மேற்பார்வையாளர் பூபாலன், வட்டார பயிற்றுனர்கள் மணிகண்டன், மணிக்கண்ணன் உள்பட ஆசிரியர்கள் 117 பேர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் கவிதா நன்றி கூறினார்.


Next Story