எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு கூட்டம்

கொள்ளிடம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் பாலு தலைமை தாங்கினார். ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பாலு பேசுகையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து கல்வி பயின்று வருகின்றனர். ஆங்கில வழியில் பயின்ற மாணவர்கள் இங்கு வந்து தமிழ் வழியில் சிறப்பாக பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு இப்பள்ளியில் புதிதாக 1-ம் வகுப்பில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.காடுவெட்டி கிராமத்தில் படிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பள்ளிக்கு செல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். இதில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.






