ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது மனநிலைக்கேற்ப நாடகம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் மூலம் எளிதாக கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆண்டு 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி எளிய முறையில் மாணவ-மாணவிகளின் மனநிலைக்கேற்ப கல்வி கற்பிக்க உள்ளது. இதுகுறித்த பயிற்சி அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களில் கடந்த 3 நாட்களாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ரமேஷ் தொடங்கி வைத்தார். கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் கோத்தகிரி தாலூகாவிற்கு உட்பட்ட தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 60 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். நீலகிரி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை சென்னை அரசு தேர்வு துறை இணை இயக்குனர் செல்வகுமார் பார்வையிட்டார்.


Next Story