தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர்

அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 1 முதல் 3-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அரவக்குறிச்சி வட்டார வள மையத்தில் நடைபெற்றது. பயிற்சியானது 24-ந் தேதி தொடங்கி இன்று (புதன்கிழமை) முடிய 3 நாட்கள் நடைபெறுகிறது. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றில் அடிப்படைத்திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மணிவண்ணன், உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (தொடக்கக்கல்வி) சண்முகவடிவு, அரவக்குறிச்சி வட்டாரக்கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாயனூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முனைவர் ராயர் ரொசாரியோ தலைமையில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அரவக்குறிச்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.


Next Story