வால்பாறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
வால்பாறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
எண்ணும் எழுத்தும் பயிற்சி
வால்பாறையில் ஒன்றிய அளவிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 88 பேருக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் மாணவ மாணவிகளின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பாடங்களை நடத்துவது குறித்து 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று முதல் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை மாணவ மாணவிகளுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், அந்த பாடங்களில் அவர்களுக்குள்ள தனித் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை எவ்வாறு ஆடல், பாடல், பேச்சு மூலமாகவும் இணைய தளம் மூலமாகவும் நடத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்பு திட்டம்
பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம் இருவரும் தலைமை தாங்கி தொடங்கி வைத்து இந்த சிறப்பு திட்டத்தை ஆசிரியர்கள் கட்டாயம் அவரவர்களின் பள்ளிக்கூடங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த பயிற்சி அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் போது மாணவ மாணவிகளுக்கு மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் செய்து காண்பிக்க வேண்டும் என்று வட்டார கல்வி அலுவலர்கள் ஆசியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில்குமார், சுகந்தி மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.