ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
எஸ்.புதூர் அருகே ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் வட்டார வள மையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 2 கட்டமாக நடைபெற்றது. இதில் 1,2,3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 2 நாட்களாகவும், 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 2 நாட்களாகவும் நடைபெற்றது. பயிற்சியை தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) செந்தில்குமார் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார். பயிற்சியில் தொடக்கப்பள்ளியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மேலும் எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி, காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மெய்யாத்தாள் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் பற்றி விளக்கிக் கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுநர்கள் கிறிஸ்டோபர், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.