சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி சங்கராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) ஆரோக்கியசாமி, (தொடக்கக்கல்வி) ராஜூ, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வரவேற்றார்.
இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை எவ்வாறு கற்பிக்க வேண்டும். கற்றல், கற்பித்தல் துணைக் கருவிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சிைய பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொன்.குமார் பார்வையிட்டார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்பிகா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் மலர்க்கொடி, சரசு, குப்புசாமி, ஸ்டாலின், பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.