நுங்கம்பாக்கம்: நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


நுங்கம்பாக்கம்: நின்று கொண்டிருந்த  மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

நுங்கம்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை


சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஹோட்டல் அருகே வரும்போது அவரது மோட்டார்சைக்கிள் திடீரென சூடாக ஆரம்பித்தது. சுதாரித்துக்கொண்ட வாலிபர் உடனடியாக மோட்டார்சைக்கிளை சாலையிலேயே நிறுத்திவிட்டு நகர்ந்த நிலையில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதைக்கண்ட அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து மோட்டார்சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் மோட்டார்சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

விசாரணையில் அதனை ஓட்டிவந்த வாலிபர் சென்னையை சேர்ந்த விஜய் என்பதும், பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நடுரோட்டில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story