நர்சு-2 குழந்தைகளுடன் தாய் மாயம்


நர்சு-2 குழந்தைகளுடன் தாய் மாயம்
x

நர்சு-2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகள் பவானி (வயது 25). இவர் திருச்சியில் தங்கி, இங்குள்ள ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவருடைய உறவினர்கள் அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதுபற்றி பவானியிடம் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் இருந்து வேலை முடிந்து அவர் சென்றுள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானியை தேடி வருகிறார்கள்.

இதேபோல் திருச்சி குமரன் நகர் பேங்கர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தேவராஜன்(45). இவருடைய மனைவி சரோஜா (37). இவர்களுக்கு சபரீஸ்வரன் (11) என்ற மகனும், சாருநேத்ரா (7) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரோஜா தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றனர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story