கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
துணை சுகாதார மையங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் சார்பில் பூலுவப்பட்டி பிரிவு அருகே உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்னம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராணி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார மைய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். யூ வின் ஆப் ஆன்லைன் பணியை கிராம சுகாதார செவிலியர்களிடம் திணிக்க வேண்டாம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Next Story