மோட்டார் சைக்கிள் மோதி செவிலியர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி செவிலியர் சாவு
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

மோட்டார் சைக்கிள் மோதி செவிலியர் பலியானார்

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவில் அருகே முத்தூர் துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வந்தவர் மலர்விழி (வயது 42). இவர் நேற்று மாலை காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து தனது இருசக்கரவாகனத்தில் மதுரை- தொண்டி பிரதான சாலையில் ஏற முயன்றார். அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே மலர்விழி உயிர் இழந்தார்.இதுகுறித்து வாகனத்தை ஓட்டி வந்த பழனிக்குமார் (27) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story