செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மதுரை


மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், இடம் மாறுதலை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சின்ன பொண்ணு, கல்யாண சுந்தரம், ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.


Next Story