நர்சுகள் ஆர்ப்பாட்டம்
நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா பரவல் காலத்தில் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, கடந்த 31-ந் தேதி ஒப்பந்த காலம் முடிவடைந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story