நர்சுகள் ஆர்ப்பாட்டம்
நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக நா்சுகள் பணி இனிமேல் நீட்டிக்கப்படாது என்று கடந்த 31-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் இந்த அரசாணையை கண்டித்து தற்காலிக நர்சுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்காலிக நர்சுகள் தங்களது கை குழந்தைகளுடன், கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் 36 பேர் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வந்தோம். எங்களை திடீரென்று பணியில் இருந்து விடுவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், அந்ததந்த மாவட்ட கலெக்டர் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணி பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த ஊழியராக தங்களால் தொடர முடியாது, நிரந்தர பணி வழங்க வேண்டி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நர்சுகள் தெரிவித்தனர்.