கலெக்டர் அலுவலகம் முன்பு நர்சுகள் ஆர்ப்பாட்டம்
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர்
கோவை
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பா.சுமதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசி, துணைத்தலைவர் ரேவதி, பொருளாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார நர்சுகள் மீது வேலைப்பளு சுமத்தப்பட்டுள்ளது. டேட்டா என்ட்ரி பணியையும் சேர்த்து பார்த்திடும் அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஊதிய விகித முரண்பாடுகளை தீர்க்க வேண்டும், அரசாணைக்கு எதிராக இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ்களை அணிந்தபடி நர்சுகள் கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story