ஈரோட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை


ஈரோட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை
x

ஈரோட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு

ஈரோட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நர்சிங் கல்லூரி மாணவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாப்பம்பட்டி எஸ்.கே.சி. நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகள் யசோதா (வயது 19). இவர் அங்குள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும், ஒரு ஆண்டு பயிற்சிக்காக ஈரோடு வந்த யசோதா, ஈரோடு பூசாரி சென்னிமலை வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி இருந்தார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கியிருந்த அறையில் உள்ள குளியலறையில் யசோதா தூக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு அறையில் தங்கியிருந்த மாணவிகள் ஓடிச்சென்று பார்த்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே யசோதா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யசோதா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story