நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x

கரூர் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கல்லூரி மாணவி

கரூர் பசுபதிபாளையம் செல்வ நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் காயத்ரி (வயது 22). இவர் கரூரில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக காயத்ரி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த காதலுக்கு காயத்ரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்

தற்கொலை

இதனால் பலத்த தீக்காயம் அடைந்து அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story