ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி


ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி
x

ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் செவிலியர் பயிற்சி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் இளநிலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொதுமருத்துவம் மற்றும் மருத்துவச்சி, அடிப்படை இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த மாணவர்களுக்கு டி.சி.எஸ். லான் மற்றும் அப்போலோமெட்ஸ்கில்ஸ் எனப்படும் செவிலியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் மேற்கண்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அப்போலோமெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி பெறுவார்கள். முதல் 2 வாரங்களில் இணையவழி கற்றல் முறையிலும் அடுத்து 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பயிற்சி முடிப்பவர்களுக்கு முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த பயிற்சியை பெற www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை 0421 2971112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

-------------


Next Story