ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் செவிலியர் பயிற்சிபெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொதுமருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு ஏற்கனவே முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு டி.சி.எஸ். அயன் மற்றும் அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் எனப்படும் செவிலியர் பயிற்சி இணைந்து வழங்கப்படவுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இப்பயிற்சியைபெற 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங்துறையில் பொதுமருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும்.
ஊக்கத்தொகை
இத்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள்.
இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழிகற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னனி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவல் கலெக்டா் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.