முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
நாங்குநேரி அருகே நடந்த மருத்துவ முகாமில் முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி அருகே சிறுமளஞ்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ராஜாக்கள்மங்களம் பஞ்சாயத்து தலைவர் வெற்றிவேல் செல்வி தலைமை தாங்கினார். நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி, மாவட்ட உதவி திட்ட இயக்குனர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்டகம், முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். முகாமில் 60 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, நாங்குநேரி யூனியன் ஆணையாளர் சங்கரகுமார், தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செலின் கமலம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.
முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு வாய்வழி சொட்டுமருந்து வழங்கும் இந்திர தனுஷ் 5.0 மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் அனிதா, சுகாதார பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சின்னத்துரை, சங்கர், மாயகிருஷ்ணன், முனைஞ்சிப்பட்டி அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.