சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x

கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி.வில்வநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் எம்.ஏழுமலை, மாநில செயலாளர் சுமதி ஆகியோர் விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் தீனதயாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.


Next Story