ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
தாளக்கரை ஊராட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் சுல்தான்பேட்டை ஒன்றியம் தாளக்கரை ஊராட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. விழாவை தலைவர் சிவகாமி வேலுச்சாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில், ஊட்டச்சத்து குறித்து வட்டார சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், கர்ப்பகால பராமரிப்பு, ஊட்டச்சத்தின் அவசியம் பற்றி சுகாதார செவிலியர் ஷீலா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சல்மா ஆகியோர் பேசினர்.
மேலும் அவர்கள், கர்ப்பிணிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், ஊராட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Next Story