ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்


ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர்

தஞ்சையில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சை ரெயிலடியில் நேற்று நடைபெற்றது.

ஊர்வலத்தை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி. மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் பங்கேற்பு

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ரெயிலடியில் இருந்து தொடங்கி காந்திஜிசாலை, ஆற்றுப்பாலம், அண்ணாசிலை வழியாக அண்ணா நூற்றாண்டு மண்டபத்தை சென்றடைந்தது, ஊட்டச்சத்து மிக்க பாரதம். எழுத்தறிவு பெற்ற பாரதம், வலிமையான பாரதம் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story