தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்


தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்
x

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.

திருச்சி

உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கலந்துரையாடினார். பின்னர் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) லட்சுமி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி, மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story