சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் முத்து வெள்ளையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்செல்வி வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கணேசன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலக காலிப்பணியிடங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story