பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள்

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சத்து மாத்திரை மற்றும் பெண்களுக்கு நாப்கின் வழங்கும் நிகழ்ச்சி கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரைகளையும், பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு நாப்கின்களையும் வழங்கி பேசினார். இதில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சங்கவை, ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story