சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம் நடத்தினர்.

திருச்சி

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அல்போன்ஸா கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி போராட்டத்தை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி சிறப்புரையாற்றினார். செயலாளர் பழனிசாமி நிறைவுரையாற்றினார். முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கிரேஸ்லில்லி நன்றி கூறினார்.


Next Story