சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
நாகப்பட்டினம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜு முன்னிலை வகித்தார். காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காலம் முறை ஊதியத்தை வழங்க வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செயலாளர் ராணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story