ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள்
ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆரணி அரசு மருத்துவமனையில் உலக காச நோய் வார விழாவையொட்டி மருத்துவ அலுவலர் டாக்டர் மமதா தலைமையில் காசநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆரணி கோட்டை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடந்த நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் கோகுல் ராஜன், வரும் ஆண்டு தலைவர் இல. ஆறுமுகம், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் வி.தியாகராஜன் வரவேற்றார். எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேம்நாத் கலந்து கொண்டு காசநோயாளிகள் கடைபிடிக்க வேண்டய வழமுறைகளை விளக்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை செவிலியர் (பொறுப்பு) டிபன் ஆன் செவிலியர் ஜெகன், காசநோய் கண்டறியும் மைய கண்காணிப்பாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காச நோய் பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.