ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி


ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி
x

மன்னார்புரத்தில் ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மன்னார்புரம் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ் தலைமை தாங்கினார். பங்குதந்தை எட்வர்டு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி திட்ட விளக்கவுரை ஆற்றினார். டாக்டர் சித்தார்த்தன் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன், சுகாதார ஆய்வாளர் அமல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்றது.


Next Story