சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க புறப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம்


சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க புறப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம்
x

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஓ. பன்னீர் செல்வம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.

சென்னை,

சென்னை, தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

ஆனால் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அவர் எதிர்கட்ச்சி துனைத்தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர்.

சட்டசபை காலை 10 மணிக்கு கூட உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு-வை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தற்போது சந்தித்துள்ளனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.

1 More update

Next Story