சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு


சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு
x
தினத்தந்தி 2 Sept 2023 2:47 PM IST (Updated: 2 Sept 2023 3:37 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்ததாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தை ஓ. பன்னீர் செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவை கைப்பற்ற நடத்திய சட்ட போராட்டத்தில் தொடர் தோல்வியை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்த நிலையில், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடனான ஓ. பன்னீர் செல்வத்தின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story