வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை


வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
x

கோப்புப்படம்

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனி நீதிபதி முன் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டார். அவசர வழக்காக எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலை இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளநிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Next Story