சாலை மார்க்கமாக தேனி சென்றடைந்தார் ஓ.பன்னீர்செல்வம் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி சென்றடைந்தார்.
தேனி,
அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் சென்றார். ஓபிஎஸ்சிக்கு அதிமுகவின் ஒற்றைத்தலைமையே, பொதுச்செயலாளரே என்ற முழக்கத்தோடு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அதன் பின்னர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி சென்றடைந்தார். தேனி சென்றடைந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தொண்டர்கள், ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து, வாழ்த்து கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார்.
Related Tags :
Next Story