ஓ.பன்னீர்செல்வம் அணி செயல்வீரர்கள் கூட்டம்
அலங்காநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே கல்லணை தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அலங்காநல்லூர் ஒன்றிய கழகசெயலாளர் சேது சீனிவாசன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டி, பேரூர் செயலாளர்கள் சேகர், வெள்ளை கெங்கை, ராமசாமி, ஒன்றிய செயலாளர் ஜோதிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவை தலைவர் தனபாலன் வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
மாவட்ட செயலாளர் முருகேசன் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் கட்சி வளர்ச்சி குறித்தும், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். என்றும் சிறப்புரையாற்றினார். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் திரவியம் நன்றி கூறினார்.