இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு


இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே முகிழ்தகம் கிராமத்தில் உள்ள முத்தமிழ் நகரை சேர்ந்தவர் செங்கோல்(வயது 73). இவர் நேற்று வயது மூப்பு காரணமாக இறந்தார். இவரது உடலை அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, தொண்டி வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செங்கோல் குடும்பத்தினர் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய வரியை ஒரு மாத காலத்தில் செலுத்துவதாக கூறியதை தொடர்ந்து இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டது. அதன்பின் இறந்த செங்கோல் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story